கரோனா பரிசோதனை செய்தவர் களை மட்டுமே வாக்கு எண்ணும்மையங்களில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், காட்பாடி தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன.
வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் வாக்கும் எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago