இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கரோனா தடுப்பூசி மையம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட ஜெயக்குமார், நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், மருந்து, உபகரணங்கள் இருப்பு ஆகியவை குறித்து கல்லூரி முதல்வர் அரசி வத்சாவிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவள்ளூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிக்காக 350 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது 125 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இங்கு போதிய அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இதேபோல, பட்டரைபெரும்புதூர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அவசரத் தேவைக்கான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago