ரூ. 6 லட்சம் பணமோசடியில் மனை வணிகரை கடத்திய 5 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் சிவன் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த 18-ம் தேதி சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா (48), ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த சம்பத் (41), தெலங்கானா மாநிலம், மந்திரியால் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா (43) ஆகியோருடன் சம்பத்க்கு சொந்தமான காரில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வந்துள்ளார்.

அப்போது மதுரையில் ரியல் எஸ்டேட் செய்துவரும் நாகராஜ் என்பவர் சிவனை மொபைலில் தொடர்பு கொண்டு விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள் ஹோட்டலில் இருப்பதாக கூறவே, சிவன் தன் நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அங்கிருந்து கண்டாச்சிபுரம் சென்றுள்ளனர்.

அங்கு இரண்டு காரில் வந்த 5 நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நாகராஜ் காரில் இருந்த சிவனை, கடத்தி சென்றதாக கூறப்பட்டது.

இந்த புகாரின் பேரில் விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நல்லசிவம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், எஸ் ஐக்கள் அன்பழகன், பிரபு, மருதப்பன், பாலசிங்கம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விழுப்புரம் , பூத்தமேடு பகுதியில் பதுங்கி இருந்த மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (53), காங்கேயம் முத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் (47), சென்னை, திருநின்றவூர் செந்தில்நாதன் (42), கார்த்திகேயன் (32), வெள்ளைக்கோயில், கரட்டுப்பாளையம், செந்தில் மனைவி சத்யா(34) ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட சிவன் மீட்கப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கார்கள், துப்பாக்கி, ராஜேஷ் கண்ணா அணிந்திருந்த பிரஸ்லெட், மோதிரம், மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தப்பட்ட சிவன் நாகராஜிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி ரூ 6 லட்சம் பெற்றதாகவும், இதுநாள் வரை வாங்கிய பணத்தையோ, வாங்கி தருவதாக சொன்ன இரிடியத்தையோ கொடுக்கவில்லை என்பதால் கொடுத்தப் பணத்தை பெறுவதற்காக நாகராஜ் தன் நண்பர்களுடன் சிவனை கடத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட காங்கேயம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மீது தமிழகம் முழுவதும் வழிப்பறி, கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்