திண்டுக்கல்லில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல இரவு கடைசி பேருந்து நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநி லையைப் பரிசோதித்த பின்னரே பேருந்துகளில் ஏற பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு முழுமையாக அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் புறப்படும் இரவு கடைசிப் பேருந்துகள் நேரம் குறித்து அரசுப் போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்குப் புறப்படும் கடைசி பேருந்து நேர விவரம்: கோயம்புத்தூர் இரவு 7, திருப்பூர் இரவு 7.30, கம்பம் இரவு 7, போடி இரவு 7.30, திருச்சி, தேனி, கரூர் இரவு 8, மதுரை- இரவு 8.30, பழநி இரவு 9, வத்தலகுண்டு, நத்தம் ஆகிய ஊர்களுக்கு இரவு 9.
பழநி பேருந்து நிலையத்தி லிருந்து புறப்படும் நேர விவரம்:
திருச்சி மாலை 6.30, தேனி இரவு 7, மதுரை இரவு 7.30, திண்டுக்கல் இரவு 9 மணிக்கும் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வந்த பயணி களுக்கு தெர்மோ ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரி சோதிக்கப்படுகிறது. தொடர்ந்து கிருமிநாசினி வழங்கப்பட்டு பேருந்தில் ஏற அனுமதிக்கப் பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago