பில்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க மோசடி வழக்கில் சங்க தலைவர் மற்றும் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர் அடுத்த பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பில்லூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சங்கம் மூலம் பயிர்கடன், நகைக்கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு மே 26-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வரை பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் ரூ.31 லட்சத்து 78 ஆயிரம் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் நாமக்கல் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வங்கித் தலைவர் வேலுச்சாமி ( 63), செயலாளர் வெங்கடேச பெருமாள் (57) ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago