கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணரா யபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டுள்ளன.
இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப் புக்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளின் முகவர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் தொகுதி வேட்பாளரும், மாநில போக்குவரத் துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை நேற்று பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியது: தேர்தல் ஆணை யம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது.
திமுகவினர் தோல்வி பயத்தால் கன்டெய்னர் வருவதைப் பற்றி கூறுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளதால் கன்டெய்னர் செல்வதைக்கூட, அவர்கள் குறை சொல்வார்கள். அதிமுக 140 இடங்களில் தனித்து வெற்றி பெற்று, மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago