பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் தெரிவித்தது: பெரம்பலூர் மாவட்டத்தில் 1,00,843 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,413 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 2,338 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 37 பேர் பிற மாவட்ட மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின் றனர். பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் 100 படுக்கைகள், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 180 படுக்கைகள் என மொத்தம் 280 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இதில் 34 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 23 இடங்களில் 783 படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை அரசு மருத்துவமனைகள், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ மனை, அனைத்து மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்கள் ஆகியவற்றில் ‘ஏ’ பிரிவில் 20 ஆக்சிஜன் சிலிண்டர் களும், ‘பி’ பிரிவில் 120 ஆக்சிஜன் சிலிண்டர்களும், ‘சி’ பிரிவில் 21 ஆக்சிஜன் சிலிண்டர்களும், ‘டி’ பிரிவில் 326 ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை 29,589 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவு கரோனா தடுப்பூசி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பில் உள்ளன. மேலும், பாரம்பரிய மருத்துவ முறை களான சித்தா, இயற்கை வைத்தியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசின் வழிகாட்டு நெறிமுறை களை தவறாமல் கடைபிடிப் பதை உறுதிசெய்திட, குறு வட்டத்துக்கு தலா ஒரு குழு வீதம் 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரூ.5.65 லட்சம் அபராதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 2,752 பேரிடமிருந்து ரூ.5,65,100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை உணர்ந்து அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago