கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வெளியூர் பய ணங்களை தவிர்க்க வேண்டுமென தி.மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி தலைமை வகித்து, கரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர், ஊராட்சி செய லாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பங் கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “பொதுமக்கள் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமி நாசினியை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மற்றவர்களுடன் கை குலுக்கு வதை தவிர்க்க வேண்டும். அனைத்து ஊர்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால், வெளியூர் பயணங்களை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.
இதையடுத்து, கிராமங்களில் ஆட்டோ மூலம் மேற்கொள்ளப் படவுள்ள விழிப்புணர்வு பிரச் சாரத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, சேத்துப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிறப்பு முகாமை திட்ட இயக்குநர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது, வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு, ஆணையாளர்கள் ரவி, ரபியுல்லா, ஒன்றியக் குழுத் தலைவர் ராணி அர்ஜுனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago