சென்னையில் வரும் 25-ம் தேதி நடைபெற இருந்த ராணுவ பணிக்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் சார்பில் ராணுவ பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் தி.மலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
புதுச்சேரி மற்றும் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 25-ம் தேதி, சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பொது நுழைவுத் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் கரோனாதொற்று பரவல் காரணமாக, பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது நுழைவுத் தேர்வுக்கான புதிய தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
புதிய தேதி அறிவிக்கப்பட்டதும், சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து, புதிய அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago