கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் - 238 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் நேற்று புதிதாக 238 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகா தாரத் துறை வெளியிட்டிருக்கும் தகவல் விவரம் வருமாறு:

கடலூர் மாவட்டத்தில் நேற்று 156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இதுவரையில் 27,985பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று வரை 26,306 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 308 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16,642பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை 15,887 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 66 பேர் குணமாகி வீடு திரும் பியுள்ளனர். தற்போது 641பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 27பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதன் மூலம் 11,580 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று வரை 11,021 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 451பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 108 பேர் உயி ரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்