செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை - தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஆய்வு :

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளைதமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாகஇயக்குநர் எஸ்.ஜெயந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கரோனா தாக்கம் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், செய்முறைத் தேர்வு தள்ளிவைக்கப்படவில்லை. கடந்த 16-ம் தேதி முதல் கணிப் பொறியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 19 பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் 24-ம்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த செய்முறைத் தேர்வுகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் 313 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 850 மாணவ, மாணவிகளுக்கு 212 மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பெருமாள் அரசு மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை நேற்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் எஸ்.ஜெயந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தேர்வு மையங்களில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வுமேற்கொண்டார். அவருடன் மேல்நிலை கல்வி இணை இயக்குநர் குமார், செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏஞ்சலோ இருதயசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்