பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு - கரோனா எதிர்ப்பு சித்த மருந்துகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சித்த மருத்துவக் குழு சார்பில் கரோனா தொற்றுக்கு எதிரான சக்தியை வழங்கும் கபசுர குடிநீர் சூரணம், அமுக்கரா சூரண மாத்திரை, தாளிசாதி சூரண மாத்திரை உள்ளிட்டவற்றை ஆட்சியர் ப. வெங்கடபிரியா நேற்று வழங்கினார்.

இதுகுறித்து ஆட்சியர் தெரிவித் தது: சித்த மருத்துவக் குழு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மருந்தாக ஒரு நபருக்கு கபசுர குடிநீர் 60 மி.லி, கபசுர குடிநீர் சூரணம் 100 கிராம், அமுக்கரா சூரண மாத்திரை 30, தாளிசாதி சூரண மாத்திரை 30, தாளிசாதி சூரணம் மற்றும் கரோனா தொற்றை தடுக்க சித்த மருத்துவம் பரிந்துரை செய்யும் தன் சுகாதாரம் பேணுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் வழிமுறைகள் குறித்த கையேடு ஆகியவற்றை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொண்டு கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ், மருத்துவர்கள் விஜயன், ராகுல் ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்