புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதி களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனியான அறைகளில் வைத்து பாது காக்கப்பட்டு வருகின்றன. இம்மை யத்தில், துணை ராணுவத்தினர், ஆயுதப் படை பிரிவினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வேட்பாளர்களின் முகவர்களும் தேர்தல் தொடர்பான அலுவ லர்களும் பணியில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் பணிக்காக இக்கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளோடு, தற்காலிக கழிப்பறைகளும் ஏற்படுத் தப்பட்டுள்ளன. இவற்றில், கல் லூரி கலையரங்கம் பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண் களுக்கான கழிப்பறைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் வருவ தில்லை.
நாளொன்றுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற நேரங்களில் வருவதில்லை. இதனால், அங்கு பணிபுரிவோர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து வாக்கு எண்ணும் மையத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் கூறியது: கழிப்பறைகளில் பெரும்பாலும் பகல் நேரங்களில் தண்ணீர் வந்துவிடுகிறது. இரவு மற்றும் அதிகாலையில் தண்ணீர் வருவதில்லை. இது தொடர்பாக பல முறை அங்குள்ள அலுலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
மத்திய பாதுகாப்பு படையினர் மொழிப் பிரச்சினையால் தங்களது பிரச்சினையை தெரிவிக்க முடியா மல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்தப் பிரச்சினை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியபோது, “தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago