5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க - திருவிழாக்களை கட்டுப்பாடுடன் நடத்த அனுமதிக்க வேண்டும்தி.மலையில் : பந்தல் அமைப்பாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவிழாக்களை கட்டுப்பாடு களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு பந்தல் அமைப்பாளர்கள் (டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ்) நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அச்சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி மூலம் நேற்று அளித்துள்ள மனுவில், “திருமணம், திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் சார்ந்து தமிழகம் முழுவதும் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். கரோனா ஊரடங்கு கடந்தாண்டு அமல்படுத்தியபோது, தொழி லாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஓரிரு மாதங்களாக, எங்களது தொழில் துளிர்விட்டது.

இந்நிலையில், தொழில் முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கோயில் திருவிழாவை தடை செய்தும், திருமண விழாக் களில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு கடந்த 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு, 5 லட்சம் தொழிலாளர்கள் குடும்பங் களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை கவனத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்களை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மேலும், கூட்ட அரங்கம் மற்றும் திருமண மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீத நபர்கள் கலந்து கொள்ள வும் அனுமதிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், வெப்ப நிலை பரிசோதனை செய்தல், கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்த தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்