காட்பாடி அருகே டாஸ்மாக் மதுபான கடையின் சுவற்றை துளையிட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
காட்பாடி அடுத்த கசம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக பணியாற்றி வரும் திருநாவுக்கரசு என்பவர் வழக்கம்போல் நேற்று பகல் 12 மணியளவில் கடையை திறந்துள்ளார். அப்போது, கடைக்குள் வெளிச்சமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தார். அங்கு சென்று பார்த்தபோது ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவற்றை துளையிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் உள்ளே புகுந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு திசையில் திருப்பி சேதப்படுத்தியதுடன் அதன் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு
இதுகுறித்து திருவலம் காவல் நிலையில் மதுபான கடையின் மேற்பார்வையாளர் அமிர்தலிங்கம் (50) என்பவர் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகள் அனைத்தும் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பதிவாகி இருக்கும் என்பதால், அந்த வீடியோ காட்சிகளை பெற்று ஆய்வு செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago