திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,560-ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். நேற்று 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 176 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு இரும்பினாலான தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் பரவல் அதிகம் காணப் படும் பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2,277 பேர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 5.30 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 5,607 பேர் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
கரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago