வேலூர் மாவட்டத்தில் உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா ஊரடங்கு நடைமுறை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உழவர் சந்தைகள், காய்கறி மற்றும் பூக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, காட்பாடி உழவர் சந்தை காட்பாடி டான்போஸ்கோ பள்ளியிலும், வேலூர் டோல்கேட் உழவர் சந்தை தொரப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், குடியாத்தம் உழவர் சந்தை குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அதிகாலை 4 மணி முதல்் பகல் 12 மணி வரை இயங்கும்.
வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி மொத்த விற்பனை மாங்காய் மண்டி பகுதியிலும், நேதாஜி மார்க்கெட் சில்லறை விற்பனை கடைகள் பழைய மீன் மார்க்கெட் வளாக்திலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். நேதாஜி மார்க்கெட் பூக்கடை மொத்த வியாபாரம் அதே இடத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இயங்கும், நேதாஜி மார்க்கெட் பூக்கடை சில்லரை வியாபாரம் டவுன் ஹால் பகுதியில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேதாஜி மார்க்கெட் பூக்கடை மொத்த வியாபாரம் அதே இடத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இயங்கும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago