செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள், 3 மையங்களில் எண்ணப்படுகின்றன. தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள், தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் எண்ணப்படுகின்றன. அதேபோல் செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தண்டரையில் உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியிலும், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் மதுராந்தகம் அருகே நெல்வாய் கூட்டு சாலையில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு ஆட்சியர் அ. ஜான் லூயிஸ் தாம்பரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உட்காருவதற்கான இடம், வாக்கு எண்ணுவதற்கு தேவையான மேஜைகள் போடுவதற்கான இடம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தபால் வாக்கு எண்ண புதியதாக மேஜை அமைக்கப்படவுள்ளது. அதுகுறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடம் தெரிவித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். பின்னர் வேட்பாளர்களின் முகவர்கள் தங்கியுள்ள இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago