இந்நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200, சமூக இடைவெளியைப் பின்பற்றாத காய்கறி, மளிகைக் கடை உரிமையாளர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல, வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை ஆய்வு செய்யாதது, கிருமிநாசினியைப் பயன்படுத்தாதது ஆகியவற்றுக்காக வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த வகையில், ஆவடி புதிய ராணுவ சாலை, சி.டி.எச். சாலை, திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரையிலான 18 நாட்களில் மொத்தம் ரூ. 2.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago