கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு - 33 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகப்படுத் தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனால் ஒரே தெருக்களில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கரோனாவால் பாதிக் கப்பட்டிருந்தால், அந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையிலும், வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்வதை தடுக்கும் வகையிலும் கட்டுப்பாட்டு பகுதியில் தடுப்பு கட்டைகள் கட்டப் பட்டு, போலீஸார் மூலம் கண் காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் 18 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 15 இடங்கள் கட்டுப் பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் மொத்தம் 33 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறி விக்கப்பட்டுள்ளது.

தடுப்பு கட்டைகள்கட்டப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்