கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு : துணிச்சலுடன் உடலை மீட்ட 80 வயது முதியவர்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடைய நல்லூர் கலந்த பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் மகன் முகம்மது யாஷர் (15). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பகல் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் கடையநல்லூர் அட்டைகுளம் அருகில் உள்ள தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

கிணற்றின் சுற்றுச் சுவரில் நடந்து சென்றபோது கிணற்றுக் குள் தவறி விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், வீட்டுக்கு வந்து உறவினர்களிடம் கூறினர்.

தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தீயணைப்புப் படையினர் தேடினர்.

கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறுவனை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூரைச் சேர்ந்த முப்புடாதி (80) என்ற முதியவர், ஆழமான கிணற்றிலும் மூழ்கிச் சென்று, நீருக்கு அடியில் கிடக்கும் உடலை மீட்பதில் தேர்ந்தவர் என்று அறிந்து, அவரை அழைத்து வந்தனர்.

கிணற்றில் குதித்த முப்புடாதி, தண்ணீருக்கு அடியில் கிடந்த முகமது யாஷர் உடலை மீட்டார். பின்னர், பிரேதப் பரிசோத னைக்காக கடைய நல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவை க்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்