கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் - 2-ம் கட்ட தடுப்பூசி போட வேண்டியவர்கள் ஏமாற்றம் : அரியலூர் மாவட்டத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், 2-ம் கட்ட தடுப்பூசி போட வேண்டியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை, 7 அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனுமதி பெற்ற 6 தனியார் மருத்து வமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கரூர் மாவட் டத்துக்கு கோவிஷீல்டு 51,100, கோவேக்சின் 4,700 என 55,800 தடுப்பூசிகள் வரப்பெற்றன.

இதில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை மற்றும் குளித்தலை அரசு மருத்துமனையில் மட்டும் கோவேக்சின் பயன்படுத் தப்பட்டன. பிற அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் கோவிஷீல்டு பயன்படுத்தப் பட்டன. இவற்றில் மாவட்டத்தில் 43,292 கோவிஷீல்டு, 4,177 கோவேக்சின் என மொத்தம் 47,469 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 8,331 தடுப்பூசிகள் வீணாகிவிட்டன.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முதலில் 4 வாரங்கள் கழித்தும், தற்போது 6 வாரங்களிலிருந்து 8 வாரங்களுக் குள்ளும் 2-ம் கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், கடந்த இரு நாட்களாக தடுப்பூசிகள் இருப்பு இல்லாததாலும் 2-ம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், புதிதாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களுக்கு தடுப்பூசி போடமுடியாத நிலை உள்ளது.

கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் தாய்சேய் நல விடுதிக்கு நாள்தோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகள வில் மக்கள் வரும் நிலையில், அங்கு தடுப்பூசி மருந்து இல்லாத காரணத்தினால், தற்காலிகமாக தடுப்பூசி போடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தடுப் பூசி மருந்து சென்னையில் இருந்து எப்பொழுது வரும் என்ற தகவல் எங்களுக்கும் தெரியாது. தற்பொழுது வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுவது இல்லை. தங்கள் சிரமத்துக்கு வருந்துகிறோம் எனவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார், “இன்று (நேற்று) 500 கோவேக்சின் தடுப்பூசிகள் வருகின்றன. அவை வந்ததும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி வந்ததும் மற்ற இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்” என்றார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை களிலும் கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடின்றி போடப்பட்டு வந் தது. அதேநேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியது.

இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த மக்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தோம். ஆனால், தடுப்பூசி இல்லை எனக் கூறினர். எனினும், அனை வரின் செல்போன் எண்களையும் மருத்துவர்கள் பதிவு செய்து கொண்டு, தடுப்பூசி வந்தவுடன் தொடர்பு கொண்டு அழைப்பதாக தெரிவித்தனர்” என்றனர்.

அரியலூர் அரசு தலைமை மருத் துவமனையில் விசாரித்தபோது, “நாளை(இன்று) போதுமான அளவு தடுப்பூசிகள் வந்துவிடும். தடுப்பூசி கள் வந்தவுடன் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்” என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்