ஆண்டுதோறும் சித்திரை மாதத் தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முயல் வேட்டை திருவிழாக்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடை பெறும்.
கிராமப்பகுதிகளில் உள்ள ஆண்கள் வீட்டுக்கு ஒருவர் என குழுவாக சேர்ந்து சாமி கும்பிட்டு விட்டு வனப் பகுதிகளுக்குச் சென்று முயல்களை வேட்டையாடி வருவர். அந்த முயல்களை ஊரில் உள்ள பொதுவான இடத்தில் வெட்டி இறைச்சியை சாமிக்கு படையலிட்டு பின்னர் அந்த இறைச்சியை அனைவரும் பங்கிட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவது வழக்கம். இந்நிகழ்சிக்கு முயல்வேட்டை திருவிழா என பெயர்.
கரோனா வழிகாட்டு நெறிமுறை கள் காரணமாக நிகழாண்டு முயல் வேட்டை திருவிழா நடத்தக் கூடாது என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அறிவித்திருந்தது. வன விலங்குகள் சட்டப்படி வனப் பகுதியில் வசிக்கும் முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்ப தால் வனத் துறையினரும் முயல் வேட்டைக்கு தடை விதித்து, தடையை மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், இந்த எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளையம், புதுநடுவலூர், சிறுவாச்சூர், அரணாரை, எசனை, துறைமங்கலம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago