கரூர் மாவட்டத்தில் - மார்ச் முதல் 48,000 பேருக்கு கரோனா பரிசோதனை :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல் 48,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று 2-வது அலை பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக் கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை கரூர் மாவட்டத்தில் 14,457 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12,35,455 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2,39,502 பேருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் தற்போது வரை நடத்தப்பட்ட 1,411 மருத்துவ முகாம்களில் 1,38,673 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. அதில், 48,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 27 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 47 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுக் கான அறிகுறிகள் இருந்து பரிசோதனையில் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்ட 38 பேருக்கு அறிகுறிகள் நீங்கும் வரை சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏப்.15-ம் தேதி முதல் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,393 பேருக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர்.

கரோனா 2-வது அலை பரவிவருவதால் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு குப்பை தேங்காமலும், வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்யவும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுச்சாமிபுரம், திண்ணப்பா திரையரங்க முனை, எம்ஜிஆர் சிலை அருகில், ஐந்துசாலை, காமராஜ் மார்க்கெட், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், மக்கள்பாதை, உழவர் சந்தை, பசுபதிபாளையம் ரவுண்டானா, தொழிற்பேட்டை, தெற்கு காந்திகிராமம் இரட்டை தண்ணீர் டேங்க், ராயனூர் பேருந்து நிறுத்தம், தாந்தோணி பிரிவு அலுவலகம் ஆகிய இடங்களில் நாள்தோறும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக் கள் அனைவரும் கரோனா தொற் றுப் பரவலை கட்டுப்படுத்த வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்