பெரம்பலூர் நகரில் முகக் கவசம் அணியாமல் சாலைகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் பிடித்துச் சென்று கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
பெரம்பலூர் நகரில் பெரும் பாலான பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடை வெளியை பின்பற்றுதல் ஆகிய கரோனா வழிகாட்டு விதிமு றைகளை பின்பற்றுவதில்லை. இதனால், போலீஸ், வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை, நகராட்சி நிர்வாகத்தினர் அபரா தம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக வெளியே திரியும் நபர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்து நூதன முறையில் தண்டனை அளிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, புதிய பேருந்து நிலையம், ஆத்தூர் சாலை, பாலக்கரை பகுதிகளில் நேற்று முகக்கவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சுகாதாரக் குழுவினர் இவர்களிடம் சளி மாதிரியை சேகரித்துச் சென் றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago