கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிப்பதுடன், கடைளுக்கு சீல் வைக்கப்படும், என குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, நகராட்சிப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைக்காரர் களும், தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக நிற்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும்.
முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இந்த அறிவுரைகளை பின்பற்றாத கடை உரிமையாளர் களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பொது சுகாதார சட்ட விதிமுறைப்படி கடைக்கு சீல் வைத்து மேல் நடவடிக்கை தொடரப்படும். எனவே, அனைத்து இறைச்சிக் கடைகளும் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago