ஆவடி மாநகராட்சியில் ரூ.27.3 கோடி மதிப்பிலான மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு ரூ.27.3 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதில், தீயணைப்பு நிலைய சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி கடந்த 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக, இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து, வாகனஓட்டிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதேபோல், ஆவடி சின்னம்மன் கோயில் தெரு சாலையிலும், மழைநீர் வடிகால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியை உடனடியாக நிறைவேற்றி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago