சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெடிகுண்டு வீசி விவசாயியை கொலை செய்தவருக்கு சிவகங்கை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்புவனம் அருகே தூதையைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(35). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலரு க்கும் வைகை ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு அக்.3-ம் தேதி காலை முத்துராமலிங்கம் டிராக்டரில் தனது தோட்டத்துக்குச் சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது.
இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தட்சிணாமூர்த்தி(30), அறிவழகன்(29), சேங்கைச்சாமி உட்பட 7 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போதே தட்சிணாமூர்த்தி, அறிவழகன் இறந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சேங்கைச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago