கரூரில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தளவாபா ளையம் எம்.குமாரசாமி பொறியி யல் கல்லூரியில் மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இப்பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கரூர், குளித்தலை தொகுதிக ளுக்கு காலையிலும், கிருஷ்ண ராயபுரம், அரவக்குறிச்சி தொகுதி களுக்கு பிற்பகலிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வை யாளர்கள் 64 பேர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் 62 பேர், நுண்பார்வையாளர்கள் 64 பேர் ஈடுபட உள்ளனர்.

பயிற்சி வகுப்பில் ஆட்சியர் பிரசாந்த மு.வடநேரே பேசியது: வாக்கு எண்ணிக்கைக்கு 24 மணி நேரத்துக்கு முன் கணினி முறை குலுக்கலில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணிபுரிய வேண்டிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது பணியில் உள்ள அலுவலர்கள் அனைவரும் காலை 5 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் இருக்கவேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்