திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை உட்பட 3 மலைகளில் வாழும் விலங்குகளின் தாகத்தை தணிக்க குட்டைகள் அமைத்து தண்ணீர் நிரப்பும் பணியில் தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தி.மலையில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மற்றும் கவுத்தி – வேடியப்பன் மலைகள் உள்ளன. இங்கு, மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இவைகள் அனைத்தும், கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்யப்பட்ட வனத்துறையினரின் முயற்சிகள், முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக. வனத் துறையுடன் ரேகன்போக் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு இணைந்து வன விலங்குகளின் தாகத்தை கடந்த 3 ஆண்டுகளாக தீர்த்து வருகிறது. மூன்று மலைகளின் அடிவார பகுதியில் குட்டைகளை அமைத்து, அதில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை நிரப்பி தாகத்தை தணித்து வருகிறது.
இதையொட்டி, அந்த அமைப் பின் மூலமாக அண்ணாமலை, கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலைகளின் அடிவார பகுதிகளில் 10 குட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 6 பெரிய குட்டைகள் அடங்கும்.
அந்த குட்டைகளில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. மார்ச் மாதம் முதல் பருவ மழை தொடங்கும் காலம் வரை நடைபெறுகிறது. இதன்மூலம் வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் தாகம் தணிக் கப்படும் என நம்பப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago