நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், கடும் உடல் பாதிப்படைந்தவர்கள், தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 2,325 மாற்றுத் திறனாளிகளுக்கு 2021-2022-ம்நிதியாண்டில் பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை தயார் நிலையில் உள்ளது.பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் ‘உயிருடன் வாழ்ந்து வருகிறார்’ என்பதற்கான சான்று, தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து உரிய படிவத்தில் பெற்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago