நாமக்கல் மதுவிலக்கு பிரிவு சார்பில் கொல்லிமலை செம்மேட்டில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்துக்கு மதுவிலக்கு எஸ்ஐ தேசிங்கன் தலைமை வகித்தார்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும்தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. ‘கள்ளச்சாராயம் குடிக்கும் பணத்தை குழந்தை களின் கல்விக்கு செலவிடு, கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு உயிர் இழப்பை தேடாதே, கள்ளச்சாராயம் இல்லாத கிராமம் கடவுள் வாழும் ஆலயம்’என்பதுள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்பொதுமக்களிடம் விநியோகிக் கப்பட்டன.
மேலும், போதைப் பொருட்கள் விற்பனை பற்றிய புகார்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago