விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - ஒரே நாளில் 212 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் நேற்று வரை 16,229 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 15,617 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 498 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 11,337 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 10,920 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 498 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரையில் இம்மாவட்டத்தில் 27,254 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 25,895பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 299 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்