அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டாக தகுதியானோரை அங்கீகரித்து ஆணை வெளியிட வேண்டும் : புதுச்சேரியில் அக்குபஞ்சர் கவுன்சில் பொதுக் குழுவில் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட் அன்ட் ரிசர்ச் சென்டரின் 24- வது பொதுக்குழு கூட்டம் கவுன்சிலின் நிறுவன தலைவரும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மனுமான டாக்டர் ரவி தலைமையில் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து சுமார் 200 அக்குபஞ்சர் நிபுணர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நிகழ்வுகளை கவுன்சிலின் செயல் தலைவர் டாக்டர் மனோஜ், பொருளாளர் டாக்டர் ராஜாலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் அக்குபஞ்சர் சிகிச்சை முறை செய்து வருபவர்களுக்கு அரசு முறையான அங்கீகாரம் வழங்காவிட்டாலும் அரசு அதரவு அளித்து கொண்டிருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இயற்கை வழி சிகிச்சை முறைதான் அக்குபஞ்சர் என்பதால் இன்றைக்கு உலகஅளவில் அக்குபஞ்சர் பரவி வருகிறது. எனவே லட்சக்கணக்கில் அக்குபஞ்சரை கற்றுள்ள தகுதியான நிபுணர்களை அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டாக அங்கீகரித்து ஆணை வெளியிட வேண்டும். அக்குபஞ்சர் தெரபிஸ்டுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிறுவனர் தினமாக ஆண்டு தோறும் அக்டோபர் 26-ம் தேதியை கொண்டாடிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிகழ்வில், இந்த அமைப்பின் செயலாளர் பேரசிரியர் டாக்டர் உஷா ரவி, கரோனாவுக்கு சிறப்பு அக்குபஞ்சர் சிகிச்சை முறைகள் எப்படியுள்ளது. வெளிநாடுகளில் கரோனாவுக்கு அக்குபஞ்சரில் என்ன செய்கின்றனர் என்ற அறிவியல் பூர்வமாக விளக்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்