கீழடி அகழாய்வில் கல்லால் ஆன உழவு கருவி, பகடை கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பிப்.13-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. கீழடியில் 9 குழிகளுக்கு அளவீடு செய்து படிப்படியாக தோண்டப்பட்டு வருகின்றன. இதில் பாசிமணிகள், பானை ஓடுகள், பானைகள், தட்டுகள், மண்ணாலான கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள், கருப்பு, சிவப்பு நிற மண் கிண்ணங்கள், மண் பிரிமனை, கருப்பு நிற தட்டு போன்றவை கிடைத்தன. நேற்று கல்லால் ஆன உழவுக்கருவியும், பகடையும் கிடைத்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்