அருப்புக்கோட்டையில் ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புளியம் பட்டியில் பிரசித்தி பெற்ற ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பங்குனிப் பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா காரணமாக திருவிழா கொண்டாடுவது தடைபட்டது. அதைத் தொடர்ந்து கடந்த வாரம் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனிப் பொங்கல் திருவிழா தொடங்கியது.
திருவிழாவில் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு தொடர் மழையிலும் தேரோட்டம் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக மாட வீதிகளில் தேர் சுற்றிவராமல் கோயிலை மட்டுமே சுற்றிவர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனால், கோயிலைச் சுற்றி தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை கள் நடைபெற்றன. ஏராளமான பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago