தென்காசியில் வடக்கு ரத வீதியில்உள்ள விடிஎஸ்ஆர் சில்க்ஸ் பட்டுஜவுளி ரெடிமேட் நிறுவனத்தில்ஆண்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பிரத்யேக ஷோரூம் திறப்புவிழா நடைபெற்றது. விடிஎஸ்ஆர். முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். விடிஎஸ்ஆர். கனியப்பா, மசூது, இம்ரான் ஆகியோர்முன்னிலை வகித்தனர். ரகுமான்கான் என்ற பாபு வரவேற்றார். ஷோரூமை தென்காசி நகராட்சி ஆணையர் எஸ்.எம்.பாரிஜான் திறந்து வைத்தார். தூத்துக்குடி வணிகவரி உதவி ஆணையர் இரா.முருகன் முதல் விற்பனையை தொடங்கி வைக்க, மதுரையைச் சேர்ந்த டி.சேதுராமன் பெற்றுக் கொண்டார்.
தென்காசி அன்சாரியா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது மீரான், கரூர் வைசியா வங்கி மேலாளர் சிவானந்தம், எம்.ஆர். மெடிக்கல் பக்ருதீன், ஜாஸ் பில்டர்ஸ் சுல்தான், தொழிலதிபர் பாலச்சந்திரன், சிவகாசி செய்யது இப்ராகிம், முஹம்மது இக்பால், முஹம்மது அஸ்கர், சவுதா எலக்ட்ரிக்கல்ஸ் சாலிஹ், கடையநல்லூர் அன்சாரியா அரபிக் கல்லூரி முதல்வர் முகைதீன், திருநெல்வேலி நடுப்பேட்டை முகைதீன் ஜும்மா பள்ளி செயலாளர் மீரா உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உரிமையாளர் முகமது இஸ்மாயில் கூறும்போது, “விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிறுவனத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களின் ஷர்ட்டிங்,ஷூட்டிங், வேட்டிகள், பேன்ஸி சேலைகள், பட்டு ரகங்கள், ரெடிமேட் ஆடைகள், ஜீன்ஸ் வகைகள்,சுடிதார் ரகங்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் நல்ல தரத்தில் கிடைக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago