திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் 45 வயதுக்கு மேற்பட்ட 396 பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப்பணியாளர்கள், நகர கூட்டுறவு சங்கப்பணியாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள், கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களில் பணியாற்றி வரும் விற்பனை யாளர்கள், கட்டுநர்கள் என 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, திருப் பத்தூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டி.ஆர்.செந்தில், திருப்பத்தூர் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் முனிராஜ், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் முரளி கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் பூவண்ணன், சண்முகம், ரவிச்சந்திரன், தர்மேந்திரன், சித்ரா, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago