வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேலூர் நேதாஜி விளையாட் டரங்கில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இதில், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. அழைப்புக் கடிதத்துடன் வரும் நபர்கள் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையுடன் வர வேண்டும். மேலும், அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.
தேர்வுக்கு வரும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தேர்வு மையத்தில் அறிக்கை செய்யும் நேரத்தில் ஒரு வார காலத்துக்குள் பெற்ற கரோனா பரிசோதனை செய்துகொண்டு தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இதில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ் உறுதித்தன்மையை மூன்றாம் நபர் மூலமாக அழைப்புக் கடிதத்தின் நகல், மருத்துவ சான்றுடன் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு மைய தலைவர் அல்லது தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கரோனா தொற்றில் இருந்து மீண்டவுடன் தனி ஒரு நாளில் தேர்வுகள் நடைபெறும்.
தேர்வுக்கு வருபவர்கள் அரைக்கால் சட்டை, டி-ஷர்ட் அணிந்து கொண்டு பங்கேற்க விரும்பினால் ஒரே நிறம் கொண்டதாகவும் அதில் எந்தவித எழுத்துக்கள், படங்கள் இல்லாமல் அணிந்து வர வேண்டும். தேர்வுக்கு வருபவர்கள் காவலர் போன்று முடியை திருத்தம் செய்து வரவேண்டும்.
அதேபோல், மகப்பேறு காலத்தில் உள்ள பெண் விண் ணப்பதாரர்கள் தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தால் அது குறித்து அரசு மருத்துவரிடம் இயலாமை குறித்து சான்றிதழ் பெற்று குறிப்பிட்ட தேதிகளில் தகுந்த விண்ணப்பம், அழைப்புக் கடிதத்தின் நகல் மற்றும் மருத்துவச் சான்றை இணைத்து தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலூர் மாவட்ட தேர்வுக்குழு தெரிவித்துள்ள வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago