வேலூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 93 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கரோனா தொற்று பரவலை தவிர்ப்பதற்காக மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி, மொத்தம் 20 ஆயிரத்து 61 தபால் வாக்குகள் உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், மாவட்டத்தில் நேற்று (16-ம் தேதி) நிலவரப்படி காட்பாடி தொகுதியில் 2,502 தபால் வாக்குகள், வேலூர் தொகுதியில் 2,115, அணைக்கட்டு தொகுதியில் 2,143, கே.வி.குப்பம் தொகுதியில் 1,873, குடியாத்தம் தொகுதியில் 1,460 என மொத்தம்10 ஆயிரத்து 93 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன. தபால் வாக்குச்சீட்டு பெற்றவர்கள் வரும் மே 2-ம் தேதி காலை 7.59 மணிக்குள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago