கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளி கல்வித் துறை செயலாளருமான தீரஜ் குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டத்தில் கண் காணிப்பு அலுவலர் தீரஜ் குமார், கரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். இதையடுத்து அவர், தி.மலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆயுஷ் மருத்துவமனை பிரிவில் தொடங்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளான தி.மலை வ.உ.சி நகர் மற்றும் வேங்கிக்காலில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் தெருவில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமை பார்வையிட்டார். அப்போது அவர், அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினரை கேட்டுக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago