கடலூர் மாவட்டம் மற்றும் புதுச் சேரியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று தொடங்கியது. வரும் ஜூன் 14-ம் தேதி வரை இத்தடை அமலில் இருக்கும்.
கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்துக்கும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மீன்பிடிதடைக்காலம் நேற்று புதுவை,காரைக்கால், ஏனாம் பிராந்தியங் களில் தொடங்கியது. மீன்பிடி தடை காலத்தையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசை படகுகளும் கரை திரும்பின.
மீன்பிடி தடைக்காலம் குறித்து மீன்வளத்துறை புதுச்சேரி சார்பு செயலர் கணேசன் பிறப்பித்துள்ள உத்தரவில், “மீன்பிடி தடைக் காலத்தையொட்டி ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாம் கடல் பகுதிகளிலும் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டுபடகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக, இழு வலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகிறது.
மாஹேவில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை61 நாட்கள் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டுப்படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிக்க தடை செய்யப்படு கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மீன் பிடி தடைக்காலம் நேற்று தொடங் கியது. மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் 4 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், சித்திரைப்பேட்டை, ராஜாபேட்டை, எம்ஜிஆர் திட்டு, கிள்ளை, நல்லவாடு, முடச லோடை, அன்னங்கோவில் உட்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 1 லட்சம் மீனவர்கள் உள்ளனர். 2 ஆயிரம் பைபர் படகுகள், 1,500 கட்டுமர படகுகள், 500 விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர்.
நேற்று தொடங்கிய மீன்பிடித் தடையைத் தொடர்ந்துஇயந்திரங்கள் பொருததப்பட் டுள்ள 4 ஆயிரம் மீன்பிடி படகு கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago