கர்நாடகாவில் படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட சாயல்குடி கன்னிராஜபுரம் மீனவர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரையில் இருந்து 43 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன்பிடித்தபோது சிங்கப்பூரில் இருந்து வந்த ‘ஏபிஎல் லீ ஹாவ்ரே’ என்ற சரக்குக் கப்பல் மீனவர்களின் படகில் மோதியது. படகின் அருகே தத்தளித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய 2 பேரையும் கப்பல் ஊழியர்கள் மீட்டனர்.
தமிழக அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, உயிருடன் மீட்கப்பட்ட மீனவர் வேல்முருகன் நேற்று மாலை சொந்த ஊரான கன்னிராஜபுரத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்.
சம்பவம் குறித்து வேல்முருகன் கூறியதாவது, பலத்த காற்றும் அலையும் கடுமையாக வீசி வந்ததால், எதிரே வந்த கப்பல் எங்களுக்கு தெரியவில்லை. கப்பலில் வந்தவர்களுக்கும் எங்களது படகு தெரியவில்லை. இதனாலேயே கப்பல் எங்கள் படகு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீந்தி தத்தளித்தேன். பின்னர் மோதிய கப்பலில் உள்ள ஊழியர்கள் என்னை மீட்டனர் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago