ஈரோட்டில் நள்ளிரவில் - ஏடிஎம் மையத்தில் திருட முயற்சி அலாரம் ஒலித்ததால் தப்பியது :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நடக்க இருந்த திருட்டு முயற்சி அலாரம் ஒலித்ததால் தடுக்கப்பட்டது.

ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஈரோடு நகரில் மழை பெய்தது. இதனால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டீச்சர்ஸ் காலனி தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளனர்.

அப்போது, ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் பயந்துபோன திருடர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

அலாரத்தின் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வங்கி மேலாளருக்கும், சூரம்பட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்பால் பரபரப்பு

ஈரோடு- நசியனூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் நேற்று முன் தினம் மாலை பாம்பு ஒன்று செல்வதை பணம் எடுக்க வந்தவர் பார்த்துள்ளார்.

இதனால், அந்த ஏடிஎம் மையத்திற்குள் பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்ததால், மையம் அடைக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் யுவராஜ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசி இயந்திரத்தை பிரித்து தேடினார். பாம்பு பிடிபடாத நிலையில், அந்த மையத்திற்குள் செல்ல பொதுமக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்