நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி - நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் : வரும் 19-ம் தேதி திறக்க மண்டல மேலாளர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மல்லவாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் நெல் சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்க, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணா மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க துரிஞ்சாபுரம் ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, “துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு திறக்கவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை வலியுறுத்தியும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. மல்லவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 800 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை பாதுகாக்க நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்” என்றனர்.

பின்னர் அவர்கள், மண்டல மேலாளர் கோபிநாத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு கோபிநாத் அனுப்பியுள்ள கடிதத்தில், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, துரிஞ்சாபுரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வரும் 19-ம் தேதி முதல் திறக்க அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக் கொண் டுள்ளார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவ சாயிகள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்