திருப்பத்தூர் மாவட்டத்தில் - டாஸ்மாக் மதுபான கடைகள் : 2 நாட்களுக்கு மூட வேண்டும் : ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏப்ரல் 25-ம் தேதியும், மே 1-ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் வரும் ஏப்ரல் 25-ம் தேதி மஹாவீர் ஜெயந்தி தினமும், மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் (மே தினம்) கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த 2 நாட்களிலும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளையும், அதை யொட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நடசத்திர உணவகங்களில் உள்ள பார்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், மதுபான பார்கள், நட்சத்திர உணவகங்களில் உள்ள பார்கள் என அனைத்தையும் ஏப்ரல் 25-ம் தேதியும், மே 1-ம் தேதியும் மூடி வைக்க வேண்டும்.

மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்வது, பார்களை திறந்து வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் டாஸ்மாக் கண்காணிப்பாளர், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பார்கள் மூலம் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் பார் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அதன் உரிமையாளர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்