பணியின் போது இறந்தவர்களுக்காக : தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு :

By செய்திப்பிரிவு

பணியின்போது உயிரிழந்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக தீயணைப்பு துறை சார்பில் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டுவாரம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத் திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் மாவட்ட அலுவலகத்தில், பணியின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் புளுகாண்டி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நேற்று குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்சிக்கு, நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தீ விபத்து ஏற்படும்போது அதில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பன தொடர்பாக விழிப் புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தன் உயிரை தியாகம் செய்து பிற உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்றியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை வகித்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன், நிலைய அலுவலர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தீத்தொண்டு நாள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கடைமடையில் பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நேற்று தீத்தொ ண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நாடு முழுக்க பணியின்போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்காக மலர் வளையம் வைக்கப்பட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகநாதன் மற்றும் வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்