திருவள்ளூர் அருகே பாஜக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(43); வழக்கறிஞர். பாஜகவை சேர்ந்த இவர் பூண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சென்றாயன்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிலவரத்தை அறிந்து கொண்டு காரில் சென்றார்.
அப்போது காரை வழிமறித்த கும்பல் ஒன்று, சண்முகத்தை தாக்கி, கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்தது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பென்னலூர்பேட்டை போலீஸார், சண்முகத்தை தாக்கியது தொடர்பாக, சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(32) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், இவ்வழக்குத் தொடர்பாக சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்த சுரேந்தர், மாரி, ஜெயபால், சங்கர், தேவேந்திரகுமார், விஜயகுமார் ஆகிய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago