சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ஆண்டு தோறும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, தீர்த்தவாரி விமரிசையாக நடக்கும். கடந்த ஆண்டு கரோனாவால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் இந்தாண்டும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழ் புத்தா ண்டான நேற்று காலை பிள் ளையார்பட்டி கோயிலில் விநாயகரின் அங்குசத்தேவரும், மருந்தீஸ்வரரும் பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க கோயில் குளத்துக்கு அழைத்து வரப் பட்டனர். பிறகு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களில் அபிஷேகம் செய் யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. ஆனால் சிறப்பு பூஜை, தீர்த்தவாரிக்கு பக்தர்களை அனு மதிக்கவில்லை.
சுவாமி தரிசனத்துக்கு மட்டும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தங்க கவசத்தில் இருந்த மூலவர், வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் இருந்த உற்சவரை நீண்ட வரி சையில் நின்று பக்தர்கள் தரி சனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago