கரோனாவால் பயணிகளின் வருகை குறைவு - கட்டணத்தைக் குறைத்த தனியார் பேருந்து நிர்வாகம் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேருந்தில் பயணி களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பேருந்து, கட்டணத்தை குறைத்துள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக வடகாடு வரை ஒரு தனியார் நகர் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில், புதுக்கோட்டையில் இருந்து வடகாடு செல்ல ரூ.20 கட் டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இத னால், பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக இந்தப் பேருந்தில் ரூ.5 கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் பேருந் தின் உரிமையாளர் இளங்கோவன் கூறியது: தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக பேருந்தில் மிகவும் குறைந்த பயணிகளே பயணிக்கின்றனர். தினமும் டீசலுக்கு மட் டும் ரூ.7,000 செலவாகிறது. இது தவிர, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழி யர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக டீசல் செலவை ஈடுகட்டவே கட்டணம் வசூலாக வில்லை.

எனவே, கட்டணத்தைக் குறைத்தாலாவது பயணிகள் அதிகம் வருவார்கள் என்ற எதிர்பார்ப் பில், ஏப்.12-ம் தேதியில் இருந்து புதுக்கோட்டையில் இருந்து வடகாடு செல்லும் பயணிகளுக்கு மட்டும் ரூ.20-ல் இருந்து ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.15 வசூலிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு கட்டணம் குறைக்கவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்